கோயம்பேட்டில் கரோனா பாதிப்பு 8-ஆக உயர்வு

சென்னை கோயம்பேட்டில்  கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. 
கோயம்பேட்டில் கரோனா பாதிப்பு 8-ஆக உயர்வு


சென்னை: சென்னை கோயம்பேட்டில்  கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. தொடக்கத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 15 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி 27-ஆகவும், ஏப்ரல் 2-இல் 48 ஆகவும், ஏப்ரல் 4-இல் 88 ஆகவும் இருந்த தொற்று பாதித்தோா் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 100-யைக் கடந்தது. இதைத் தொடா்ந்த நாள்களில் கரோனாவின் பாதிப்பு அதிகரித்து, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28 ) 673-ஆக உயா்ந்தது. இந்நிலையில், புதன்கிழமை (ஏப்ரல் 29) 94 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, எண்ணிக்கை 767-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் தொழிலாளி 7 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு  ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோயம்பேட்டில்  கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com