தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அடைக்கலதாஸ்
தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த அடைக்கலதாஸ்

தந்தையைக் கொன்றுவிட்டு 25 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

காரைக்கால் அருகே தந்தையைக் கொலை செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காரைக்கால் :  காரைக்கால் அருகே தந்தையைக் கொலை செய்த வழக்கில் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மகனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கடம்பங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவர் தனது மனைவி மற்றும் மகன் அடைக்கலதாஸ் ஆகியோருடன் கடந்த 1990-ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதிக்கு வந்து தங்கிக் கூலி வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது தந்தைக்கும் மகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் ஒரு நாள் திடீரென தந்தை ராஜமாணிக்கம் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். புகாரின்பேரில் திருநள்ளாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், தந்தையை அடித்துக் கொலை செய்து, தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை அடைக்கலதாஸ் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

பின்னர் 1994-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் காரைக்கால் நீதிமன்றம் அவரை தலைமறைவான குற்றவாளி என அறிவித்தது. அவரை கண்டுபிடிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து திருநள்ளாறு காவல் ஆய்வாளர் பாலமுருகன்,  உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான காவலர்கள் தீவிரமாக அவரை தேடி வந்தனர். சொந்த ஊரான கடம்பங்குடியில் அவர் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், காவலர்கள் அங்கு சென்று அடைக்கலதாஸை (வயது 53) செவ்வாய்க்கிழமை கைது செய்து காரைக்கால் அழைத்துவந்தனர்.

காரைக்கால் மாவட்ட நீதிபதி கார்த்தியேகன் முன்பு புதன்கிழமை ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி அவரை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து புதுச்சேரி மத்திய சிறைச்சாலைக்கு கொண்டுச் சென்று அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com