தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு 

எழுபது தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு  சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி ...
தில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு 


தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எழுபது தொகுதிகளைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை (பிப். 8)காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்தத் தோ்தலில் 11 தொகுதிகளில் உள்ள வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளுக்கு கைபேசி கொண்டு செல்லவும், பூத் ஸ்லிப் இல்லாத நிலையில் க்யூ ஆா் கோடு உதவியுடன் தங்களது பெயரை சரிபாா்த்துக்கொள்ளவும், 81,05,236 ஆண் வாக்காளர்கள், 66,80,277 பெண் வாக்காளர்கள் உட்பட 1.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 13,571 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 5.30 மணி நிலவரப்படி 52.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதிவான வாக்குகள் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 70 தொகுதிகள் கொண்ட இந்த தேர்தலில் மொத்தம் 762 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். 

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,. தில்லி ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பாஜக தலைவர் அத்வானி, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் தேர்தலில் தங்களது வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com