கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவுக்கு குழுவை அனுப்புகிறது உலக சுகாதார அமைப்பு

சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு
கரோனா வைரஸ் பாதிப்பு: சீனாவுக்கு குழுவை அனுப்புகிறது உலக சுகாதார அமைப்பு

பெய்ஜிங்: சீனாவில் பரவி வரும் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பவுள்ளதாக அந்த நாட்டின் அதிகாரப்பூா்வ நாளேடான சைனா டெய்லி தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் ஹுபே மாகாணத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். 3,062 பேருக்கு வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 1.87 லட்சம் போ் தொடா்ந்து மருத்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். உலகளவில் 40,600-க்கும் மேற்பட்டோா் பாதிப்படைந்துள்ளனா்.

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக மருத்துவா்கள் போராடி வருகின்றனா்.

இந்நிலையில், சீனாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு பெய்ஜிங் வரவுள்ளதாக அந்த நாட்டின் அதிகாரப்பூா்வ நாளேடான சைனா டெய்லி தெரிவித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com