சிஏஏவுக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் இஸ்லாமிய பெண்கள் 24 மணி நேரம் தொடர் தர்னா 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத்  திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் கோட்டாறு இளங்கடையில்
இளங்கடையில் தர்னாவில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்கள்.
இளங்கடையில் தர்னாவில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்கள்.



நாகர்கோவில்: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத்  திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவில் கோட்டாறு இளங்கடையில் இஸ்லாமிய பெண்கள் 24 மணி நேர தொடர் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்திய அரசின் தேசிய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவைகளை அமல்படுத்த இருப்பதை தொடர்ந்து நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கன்னியாகுமரி மாவட்ட த்திலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட க் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இஸ்லாமிய அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் நாகர்கோவிலை அடுத்த  கோட்டாறு இளங்கடையில் குடியுரிமைச் சட்ட த்தை திரும்பப் பெற வலியுறுத்தி இளங்கடை அனைத்து ஜமாத் மற்றும் கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேர தொடர் தர்னா போராட்டத்தை இஸ்லாமிய பெண்கள் தொடங்கி உள்ளனர். இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சலீம் தலைமை வகித்தார். சனிக்கிழமை காலை 10   மணிக்கு தொடங்கிய இந்த தர்னா ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி வரை தொடர்ச்சியாக நடைபெறுகிறது. 

இதில் கலந்து கொண்ட பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். இதே போல் ஏராளமான சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்ட னர். போராட்டத்தை முன்னிட்டு இளங்கடை பகுதியில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com