ஜெயலலிதா ரசித்து கேட்ட பாடல்!

2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப்  பதவியேற்றபோது அரசின் சார்பில் குழந்தைகள் பாடி வரவேற்பதைப் போல் ஒரு பாடல் எழுதவேண்டும்
ஜெயலலிதா ரசித்து கேட்ட பாடல்!

2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராகப்  பதவியேற்றபோது அரசின் சார்பில் குழந்தைகள் பாடி வரவேற்பதைப் போல் ஒரு பாடல் எழுதவேண்டும் என்று அன்றைய தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறைச் செயலாளர் ராஜாராம். ஏர்வாடி ராதாகிருஷ்ணனிடம் கேட்டுக் கொண்டபோது,

 "அம்மா அம்மா அன்புள்ள அம்மா
 ஆயிரம் நன்மைகள் செய்தாயே அம்மா'
 என்று தொடங்குகின்ற பாடலை எழுதினார்.

இந்தப் பாடலுக்கு தேவா இசையமைத்தார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் விழா நடைபெற்றது. குழந்தைகள் பாடி வரவேற்பதுபோல் அமைந்த இப்பாடலை, ஜெயலலிதா மிகவும் ரசித்துக் கேட்டார். பாடல் எழுதியவர் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். இவர் வங்கி அதிகாரி என்பதும் ஜெயலலிதாவுக்கு நன்கு தெரியும். அத்தகைய சிறப்புக்குரியவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com