பிப். 27: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.
பிப். 27: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


சென்னையில் வியாழக்கிழமை (பிப்.27) பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ.74.75க்கு விற்பனை ஆகிறது. 

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தற்போதைய சூழலில் தினமும் அதிகரித்தும், குறைந்தும், மாற்றமின்றியும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் புதன்கிழமை விலையில் இருந்து லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 74.75 ஆகவும், டீசல் லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் டீசல் ரூ.68.27 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை வியாழக்கிழமை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com