விழுப்புரத்தில் நடைபெற்ற குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆய்வுக்கூட்டத்தில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த்
விழுப்புரத்தில் நடைபெற்ற குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆய்வுக்கூட்டத்தில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த்

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிறையவே குறைந்துள்ளன: ஜி.ஆனந்த் 

நாடு முழுவதும்  கடந்த ஓராண்டில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிறையவே குறைந்துள்ளன என்று தேசிய குழந்தை பாதுகாப்பு


விழுப்புரம்:  நாடு முழுவதும்  கடந்த ஓராண்டில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிறையவே குறைந்துள்ளன என்று தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

விழுப்புரத்தில் தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த் தலைமையில், குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஜி.ஆனந்த் கூறியதாவது: நாடு முழுவதும்  கடந்த ஓராண்டில்  பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  நிறையவே குறைந்துள்ளன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் அச்சப்படும் அளவுக்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுதொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் 14 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. அதில் 4 ஆயிரத்து 500 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது என கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com