கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு: இ-சேவை மையங்கள் திறக்க அனுமதிக்கப்படுமா?

பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மாணவர்கள் வசதிக்காக இ-சேவை மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்
இ-சேவை மையங்கள்
இ-சேவை மையங்கள்

இ-சேவை மையங்கள்
போடி: பொறியியல் கல்லூரி, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், மாணவர்கள் வசதிக்காக இ-சேவை மையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக சேர்க்கை விண்ணப்பம் ஆன்லைன் முறையில் கொண்டுவரப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்டு திங்கள் கிழமை (ஜூலை 20) முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கு அனைத்து மாணவர்களிடமும் கணினி மற்றும் இணையதள வசதி இல்லை. இதனால் மாணவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குத்தான் செல்ல வேண்டும். இதேபோல் கல்லூரிகளில் சேருவதற்கு சாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் முதல் பட்டதாரி சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறுவதற்கும் இ-சேவை மையங்களுக்குத்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது.

 இந்நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் பல நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் கரோனா பரவியுள்ளதால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் வெளியில் சென்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

  தேனி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து தாலுகா அலுவலகத்திலும் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், கிராம வறுமை குறைப்புக் குழுக்கள், அரசு கேபிள் டி.வி மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

 இவற்றை திறக்க அனுமதி அளித்தால் மாணவர்கள் இந்த பொது இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை அனுப்பவும், சான்றிதழ்கள் வேண்டி விண்ணப்பிக்கவும் வசதியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இ-சேவை மையங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள்,பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com