கரோனா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகும்: மார்க் எஸ்பர்

கரோனா வைரஸுக்கு தடுப்பூசி உருவாக்க 12-18 மாதங்கள் ஆகும்: மார்க் எஸ்பர்

கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான (கொவைட்-19) தடுப்பூசியை உருவாக்க சாதாரணமாக "பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்கள் ஆகும் 


வாஷிங்டன்: கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான (கொவைட்-19) தடுப்பூசியை உருவாக்க சாதாரணமாக "பன்னிரண்டு முதல் பதினெட்டு மாதங்கள் ஆகும் என்றும், சில தனியார் நிறுவனங்கள் அமெரிக்க ராணுவத்தின் காலக்கெடுவை விட விரைவாக ஒரு தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று நம்புவதாக என்று மார்க் எஸ்பர் குறிப்பிட்டார்.

கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்க பாதுகாப்புத் துறைக்கு எவ்வளவு காலங்கள் ஆகும் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பூசியை உருவாக்க சாதாரணமாக 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்று பாதுகாப்புத் துறை நம்புகிறது என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறினார். 

மேலும், சில தனியார் நிறுவனங்கள் அமெரிக்க ராணுவத்தின் காலக்கெடுவை விட விரைவாக ஒரு தடுப்பூசியை உருவாக்க முடியும் என்று நம்புவதாக கூறியவர், தனியார் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டால், பாதுகாப்புத் துறை அவர்களுக்கு கூடுதல் ஆதரவை அளிக்கும் என்றார். 

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கரோனா வைரஸ் தொற்று 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் 1,95 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 7,800 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com