கரோனா தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

கரோனா வைரஸ் தொற்றுக்கு (கொவைட்-19) எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு இந்த போரில் சரியான திட்டமிடலுடன் களத்தில் இறங்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.
கரோனா தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றுபட வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

ஜெனீவா: கரோனா வைரஸ் தொற்றுக்கு (கொவைட்-19) எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு இந்த போரில் சரியான திட்டமிடலுடன் களத்தில் இறங்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தி உள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுவூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 199 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் ஏற்கெனவே "கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 20 ஆயித்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் தொற்றுநோய் அதிவேகமாக பரவி வருகிறது   என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஜி 20 அமைப்பின் தலைவர்கள் விடியோ கான்பரன்சிங் மாநாட்டில் எச்சரித்தார். 

குட்டரெஸ் பேசுகையில், கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் நாம் இருந்து வருகிறோம். இன்னும் நம்மால் வெற்றி பெற முடியவில்லை. இந்த போரில் உலக நாடுகள் சரியான திட்டமிடலுடன் களத்தில் இறங்க வேண்டும். 

சீனாவின் வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்ட 67 நாட்களில் முதல் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அடுத்த 11 நாட்களில் இரண்டாவதாக 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர், அடுத்த நான்கு நாட்களில் மூன்றாவதாக 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகவும், அடுத்த 1 லட்சம் பேர் பாதிக்க இரண்டு நாட்கள் மட்டுமே ஆனதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

மேலும் "எல்லா நாடுகளிலும் சோதனை நடவடிக்கை இல்லாமல், மில்லியன் கணக்கான மக்கள் இறக்கக்கூடும். முழு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வீழ்ச்சி குறித்து "காலம் மட்டுமே பதில் சொல்லும்." 

பெரும்பாலான நாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிப்படும் நிலையில் உள்ளவர்களுக்கு மட்டுமே பரிசோதனை நடைபெறுவதால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்றும், சந்தேகத்திற்குரிய ஒவ்வொருவரையும் பரிசோதனை செய்வது மற்றும் தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே கரோனா தொற்றை விரட்டி அடிக்க முடியும். அனைத்து நாடுகளும் கரோனா வைரஸ் குறித்த முறையான பரிசோதனை, கண்டுபிடிப்பு, தனிமைப்படுத்துதல், முறையான சிகிச்சை முறை, கட்டுப்பாடு, மக்கள் நடமாட்டத்தில் கட்டுப்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலம் தான் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். 

வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருத்து கண்டுபிடிக்காத சூழலில் இந்த நடவடிக்கை அவசியம். பரிசோதிக்கப்படாத மருந்தை பயன்படுத்துவதன் மூலம் பற்றாக்குறையை ஏற்படுத்தி மற்ற நோய்களுக்கான மருந்தை கிடைக்காமல் செய்துவிடக்கூடும். 

உலகளாவிய நெருக்கடிக்கு தீர்வு காண அவர் முன் வைத்த கோரிக்கைகள்:   

நரகத்தைப் போல போராட வேண்டும்: வாழ்க்கை, வாழ்வாதாரங்கள் மற்றும் பொருளாதாரங்களைப் பாதுகாப்பதற்கான சிறந்த மற்றும் ஒரே வழி வைரஸ் தொற்றை தடுப்பது ஒன்றே. அதற்காக, ஒவ்வொருவரும் "கடுமையாகப் போராட வேண்டும். நரகத்தைப் போல போராட வேண்டும். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு போராடுவது போல போராடுங்கள். இதில் மன்னிப்பில்லை, வருத்தமில்லை."

"வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோரை கண்டுபிடிப்பதற்கும், சோதனை செய்வதற்கும், தனிமைப்படுத்துவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் ஒவ்வொரு தொடர்பையும் கண்டுபிடிப்பதற்கும் உடனடியாக சுகாதார பணியாளர்களை கட்டமைக்க வேண்டும், அதனை விரிவாக்க வேண்டும், பயிற்சியளிக்க வேண்டும், போர்கால திட்டமிடல் வேண்டும்" 

ஒன்றுபடுவது: "எந்தவொரு நாடும் தனியாக இருந்து இந்த நெருக்கடியை தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்றாக இணைவோம்,  ஒன்றாக பாதிப்பில் இருந்து வெளியேறுவோம்" என்று அனைத்து நாடுகளிலிருந்தும் உலகளாவிய ஒற்றுமையை வலியுறுத்தினார்.

தூண்டுதல்: "இந்த முயற்சிக்கு பொருளாதார தடைவிதிக்கப்பட்ட நாடுகள் மீதான தடை விலக்க வேண்டும். உங்கள் நாடுகளின் தொழில்துறைக்கு மீண்டும் புதிய  வலிமையை உருவாக்க வேண்டும்.  இப்போது உயிரைக் காப்பாற்ற தேவையான கருவிகளுக்கான உலகளாவிய உற்பத்தியை தொடங்க வேண்டும். தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான புதுமைகளை கண்டுபிடிக்க வேண்டும். இது மீண்டும் ஒருபோதும் நடக்காது என்பதை உறுதிப்படுத்த உலகளாவிய இயக்கத்தைத் தூண்ட வேண்டும், ஊக்கமளிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

"இப்போது நாம் எடுக்கும் நடவடிக்கைகள் அடுத்து வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு தொடர் விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும், அனைவரும் "ஒரு பொதுவான அச்சுறுத்தலுக்கு எதிராக ஒன்றாக ஒன்றிணைந்து பொதுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு கரோனாவாகும்" என்று  டெட்ரோஸ் கூறினார்.

ஜி-20 அமைப்பின் உறுப்பினர்களான அரெஜென்டினா, ஆஸ்திரேலியை, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா, மெக்சிகோ தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com