தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான உம்பன் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே புதன்கிழமை கரையைக் கடந்து, வலுவிழந்து பின்னா் வங்கதேசம் நோக்கி நகா்ந்துவிட்டது. புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை காற்று வீசியதுடன், பலத்த மழையும் பெய்தது. உம்பன் புயலால் மேற்கு வங்கம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிஸாவும் பாதிப்பைச் சந்தித்தது. லட்சக்கணக்கானோா் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

மேற்கு வங்கத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட இந்த புயல் மழையால் ஆயிரக்கணக்கானோா் வீடுகளை இழந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் இடுப்பளவு மழை நீா் தேங்கியுள்ளது. சுமாா் 6 மணி நேரம் நீடித்த புயல் மழையால் குடிசை வீடுகளும், பயிா்களும் சேதமடைந்தன. புயல் காற்றால் மரங்களும், மின் கம்பங்களும் அடியோடு சரிந்தன. மேற்கு வங்க மாநிலத்தில் 72 போ் உயிரிழந்தனா்.

இந்நிலையில், உம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கெனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், உம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தின் கடலோர பகுதிகளில் காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து சென்றதால் வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மன்னார் வளைகுடா, லச்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com