‘தலைமை நீதிபதியின் உடல்நிலை சீராக உள்ளது’ : அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது,

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது என தெரிவித்தார்.

மேலும், கரோனா அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும் என கூறினார். 

கரோனா காலத்திலும் நீதித் துறைப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, லேசான காய்ச்சல், உடல் வலி இருந்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவா் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கரோனா பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com