‘லஞ்சம் வாங்குவது பிச்சைக்கு சமம்’ -உயர்நீதிமன்றம்

அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.
Madurai High Court Order
Madurai High Court Order

அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய அரசு அதிகாரிகள் ரூ. 40 லஞ்சம் பெறுவதாக கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கூறுகையில்,

விவசாயிகள் கொண்டுவரும் ஒரு நெல்மணி வீணாப்போனாலும் அந்தப் பணத்தை அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும். அரசு அதிகாரிகள் ஊதியத்தைத் தாண்டி லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். அதிகாரிகளிடம் பணம் வசூலித்தால் மட்டுமே இதுபோன்ற தவறுகள் நடைபெறாது.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும், வழக்கு தொடர்பாக நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் நாளை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com