வேதாரண்யம் அருகே அரிய இன மரகதப் புறாக்கள் பலி

வேதாரண்யம் அருகே அரிய பறவை இனமான பச்சை புறா என அழைக்கப்படும் 3 மரகதப் புறாக்கள் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்த நிலையில், வனத்துறையனர் விசாரித்து வருகின்றன்.
மரகதப் புறாக்கள்
மரகதப் புறாக்கள்

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரிய பறவை இனமான பச்சை புறா என அழைக்கப்படும் 3 மரகதப் புறாக்கள் உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்த நிலையில், வனத்துறையனர் விசாரித்து வருகின்றன்.

புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 3 பச்சை புறாக்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற கோடியக்கரை வனத்துறையினர் இறந்த பறவைகளை கைப்பற்றினர்.

பின்னர், அவைகளை மருத்துவ உடற்கூறு ஆய்வுக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

வெப்ப மண்டலப் பகுதியில் அரிதாக காணப்படும் மரகதப்புறாவை பச்சை புறா எனவும் அழைக்கப்படுகிறது.

அழிந்து வரும் நிலையில் உள்ள இவ்வின புறா தமிழ்நாட்டு மாநிலப் பறவையாகவும் உள்ளன.

சதுப்பு நிலக்காடுகள் சார்ந்த பகுதியில் அதிகமாகக் காணப்படும் இந்த புறா இனம் கோடியக்கரை வன உயிரின சரணாலயப் பகுதியில் காணப்படுவது வழக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com