துபையில் விருந்து வைத்த பெண்ணுக்கு ரூ. 2 லட்சம் அபராதம்

துபையில் கரோனா விதிமுறைகளை மீறி தனது வீட்டில் விருந்து வைத்த பெண்ணுக்கு ரூ. 2 லட்சமும் கலந்து கொண்டோருக்கு ரூ. 1 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து துபை காவல்துறையினர் கூறுகையில், துபையில் பொறியாளராக பணிபுரியும் அரபு நாட்டுப் பெண் தனது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து வைத்துள்ளார். அதில் கலந்துகொண்டோர் கரோனா விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளி இல்லாமலும் இருந்தனர்.

இதையடுத்து, விருந்திற்கு ஏற்பாடு செய்த பெண்ணுக்கு ரூ. 2 லட்சமும் விருந்தில் கலந்து கொண்டோருக்கு தலா ரூ. ஒரு லட்சமும் அபாராதம் விதிக்கப்பட்டது.

இந்த விருந்தின் காணொளி மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருவதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

இதற்குமுன், கடந்த திங்கள்கிழமை இசைக்குழுவைச் சேர்ந்த நபருக்கும் அவரது குழு உறுப்பினர்களுக்கும் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com