சிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவில்லாமல் தவிப்பு

கரோனா தொற்றின் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக சர்வதேச உதவிக் குழு எச்சரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தொற்றின் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சிரியாவில் மேலும் 7 லட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் தவித்து வருவதாக சேவ் தி சில்ட்ரன் செவ்வாய்கிழமை எச்சரித்துள்ளது.

சேவ் தி சில்ட்ரன் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக உயர்ந்துள்ளது. 

சிரியாவின் பொருளாதாரமானது போர், ஊழல், மேற்கிந்திய பொருளாதாரத் தடைகள் மற்றும் அண்டை நாடான லெபனானின் பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளால் சிரியவைல் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர், மேலும் நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சில மாதத்திற்கு முன், உள்ளூர் நாணயம் செயலிழந்ததால், பல குழந்தைகள் உணவு கூட வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட இது போன்ற நாடுகளில் கரோனா போன்ற பெரும் தொற்று பரவுவதால் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.

சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்காவின் ஆதரவுடைய சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவில், கிட்டத்தட்ட 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.

சிரியாவில் வாழும் ஒரு பெண் கூறுகையில், ஒரு ஆப்பிள் வாங்க அவருக்கு கிடைக்கும் பணத்தை 3 வாரங்கள் சேமிக்க வேண்டியுள்ளதாகவும் அவ்வாறு வாங்கும் ஆப்பிளை 5 ஆக பகிர்ந்து குடும்பத்தில் உள்ளவர்கள் உண்பதாகவும் கூறினார்.

அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்வதாக அறிக்கையில் தெரியப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், சிரியாவில் இதுவரை 4100 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அங்கு பல சிறுவர்களுக்கு கரோனா தொற்று இருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் கரோனா பரிசோதனை செய்வதற்கு 80 டாலர் தேவைப்படுகிறது. ஆனால் அங்கு பலரின் மாத வருமானமே 100 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுத் தரப்பில் அறிகுறி உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 பரிசோதனைகள் இலவசமாக எடுக்கப்படுகிறது. மேலும் அங்கு சோதனைகளை அதிகப்படுத்தும் பட்சத்தில் தொற்றின் எண்ணிக்கை கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது.

வடக்கு சிரியாவில் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் உணவுப் பொட்டலங்களை சேவ் தி சில்ட்ரன் விநியோகிக்கும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் குழந்தைகளை காப்பாற்ற எல்லைக் கடந்து உதவி கரங்களை நீட்டுமாறு அனைத்து தரப்பினரிடமும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com