மத்திய ஆப்கானில் குண்டுவெடிப்பு : 15 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தான் டேகுண்டி மாகாணத்தில் வெடிகுண்டு வெடிப்பில் 15 பேர் பலியானதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மத்திய ஆப்கானிஸ்தான் டேகுண்டி மாகாணத்தில் வெடிகுண்டு வெடிப்பில் 15 பேர் பலியானதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில், டேகுண்டி மாகாணத்தில் கர்ஜன் மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து கண்ணிவெடி வைத்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

கட்டாரி தலைநகர் தோஹாவில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபானுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் ஆயுத மோதல்கள் மற்றும் வெடிகுண்டு வெடிப்புகள் ஆப்கானிஸ்தானை தொடர்ந்து பாதித்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலிபான்-அரசாங்கம் இடையிலான பேச்சுவார்த்தை செப்டம்பர் 12 அன்று தொடங்கியது, ஆப்கானிஸ்தானில் நீண்டகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பான மற்றும் நீண்டகால யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com