கரோனா சோதனை: இந்தூரில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது கல் வீச்சு

மத்திய பிரதேசத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நபர்களை கண்டுபிடிக்கச் சென்ற பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள
கரோனா சோதனை: இந்தூரில் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் மீது கல் வீச்சு

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நபர்களை கண்டுபிடிக்கச் சென்ற பெண் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மீது பொது மக்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்னர். இதில் பெண் மருத்துவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர். சுகாதாரத் துறை குழுவில் மூன்று மருத்துவர்கள் உள்பட ஐந்து பேர் இருந்தனர். 

இந்தூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி பிரவீன் ஜாடியா கூறினார்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 12 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் கரோனா வசிக்கும் மக்களை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக எங்களது மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.

இந்த சம்பவத்தின் போது "இரண்டு பெண் மருத்துவர்களும் தாசில்தாரின் வாகனத்தில் ஒளிந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்" என்று கூறிய ஜாடியா, பொதுமக்களின் தாக்குதலில் 2 பெண் மருத்துவர்களுக்கும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சத்ரிபுரா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக ஜாடியா கூறினார். 

கரோனா நோய்த்தொற்று மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாதது இத்தகைய தாக்குதல்களுக்கு வழிவகுத்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com