கருணையில்லா கரோனாவுக்கு, பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை பலி 

அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை ஒன்று கருணையில்லா கரோனாவுக்கு  பலியான சம்பவம் அமெரிக்கா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணையில்லா கரோனாவுக்கு, பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை பலி 


அமெரிக்காவின் கனக்டிகட் பகுதியில் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை ஒன்று கருணையில்லா கரோனா நோய்த்தொற்றுக்கு பலியான சம்பவம் அமெரிக்கா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹானில் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா நோய்த்தொற்று தற்போது உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேல் பரவி அச்சுறுத்தி வருகிறது. 

உலகம் முழுவதும் இதுவரை 9 லட்சத்து 35 ஆயிரத்து 587பேருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. தற்போது வரை நோய்த்தொற்றுக்கு 47 ஆயிரத்து 233 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 277 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்காவில் நோய்த்தொற்றுக்கு பாதிப்போர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக அளவில் நோய்த்தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

இதுவரை 2 லட்சத்து 15 ஆயிரத்து 86 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், 5 ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து ஆயிரத்து 98 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சைக்கு பின்பு 8 ஆயிரத்து 878 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கனக்டிகட் மாநிலம், ஹார்ட்போட் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழைந்தைக்கு செவ்வாய்க்கிழமை கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வாரங்களே கடந்த குழந்தை வியாழக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த தகவலை அம்மாநில ஆளுநர் நெட் லாமண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருணை இல்லாமல் தாக்கும் வைரஸ் கரோனா. உயிரிழந்தவர்களில் மிகவும் இளைய உயிர்களில் ஒன்று இந்த குழந்தை என்று  கூறியுள்ளார். 

இந்த பச்சிளம் குழந்தையின் இழப்பு வீட்டிலேயே இருப்பதன் முக்கியத்துவத்தையும் மற்ற நபர்களுக்கான வெளிப்பயன்பாட்டின் கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிறது. “உங்கள் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையும் உண்மையில் அதைச் சார்ந்தது. இந்த கடினமான நேரத்தில் இருந்து விடுபடுவதே எங்கள் குடும்பத்தின் பிரார்த்தனையாக உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
 
கரோனாவுக்கு பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்க மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com