கரோனா: உலகம் முழுவதும் பாதிப்பு 12 லட்சத்தை தாண்டியது; பலி 64,973 

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 12 லட்சத்து 5 ஆயிரத்து 801 ஆக உயர்ந்தது. 
கரோனா: உலகம் முழுவதும் பாதிப்பு 12 லட்சத்தை தாண்டியது; பலி 64,973 


ஜெனீவா: உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 12 லட்சத்து 5 ஆயிரத்து 801 ஆக உயர்ந்தது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவாகி, உலகம் முழுவதும் 216 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள கரோனா நோய்த்தொற்று. ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 நிலவரப்படி 12 லட்சத்து, 5 ஆயிரத்து 801-க்கும் மேற்பட்டோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் இந்த நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 973 ஆக அதிகரித்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 637, இத்தாலியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 632, ஸ்பெயினில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 168, ஜெர்மனியில் 96 ஆயிரத்து 92, பிரான்ஸில் 89 ஆயிரத்து 953, ஈரானில் 55 ஆயிரத்து 743, பிரிட்டனில் 41 ஆயிரத்து 743-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.  நோய்த்தோற்றுவாயான சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹானில் இதுவரை 81 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 ஆயிரத்து 326 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் அமெரிக்காவில் இதுவரை 8 ஆயிரத்து 454 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு மற்றும் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 

உலகம் முழுவதும் 2 லட்சத்து 47 ஆயிரத்து 963 பேர் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். 

உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்து வரும் கரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நோய்த்தொற்றால் உயிரிழப்பால் பாதிப்போர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தீவிரமடைந்து வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com