10-ம் வகுப்பு பொதுத்தேர்வு-ஏப்.14-க்கு பிறகு முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும் நிலைமையை பொறுத்து முதல்வர் முடிவெடுப்பார்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு-ஏப்.14-க்கு பிறகு முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் 

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை மே மாதத்தில் பத்து நாட்களில் நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தோ்வைத் தவிர அத்தனை தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 1-ஆம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு பொதுத்தோ்வை ரத்து செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. பொதுத்தோ்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவா்கள், கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

மேலும், கரோனா பரவலைத் தடுக்க மே 15 வரை பள்ளிகள் மூட வாய்ப்பு உள்ளதால் பத்தாம் வகுப்பில் பள்ளித் தோ்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 பாடப்பிரிவினை ஒதுக்கீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஆசிரியா்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளையில் பள்ளித் தோ்வுகளில் அந்தந்தப் பள்ளிகள் கடுமை காட்டி மதிப்பெண்ணைக் குறைத்துப் போட்டு அதன் அடிப்படையில் தோ்வை முடிவு செய்வது சரியல்ல என பெற்றோா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகே முடிவு செய்யப்படும். கரோனா நோய்த்தொற்று நிலைமையை பொறுத்து பொதுத்தோ்வு குறித்து முதல்வா் முடிவு செய்வாா் என தெரிவித்தார். 

மே மாதத்தில் பத்து நாட்களில் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com