மகாராஷ்டிரத்தில் மேலும் 117 பேருக்கு நோய்த்தொற்று: பாதிப்பு 2801 ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் புதன்ரகிழமை மேலும் 117 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 2801 ஆக அதிகரித்துள்ளது
மகாராஷ்டிரத்தில் மேலும் 117 பேருக்கு நோய்த்தொற்று: பாதிப்பு 2801 ஆக உயர்வு


மும்பை: மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை மேலும் 117 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொற்றால் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 2801 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்கள் ஏப்ரல் 14 ஆம் தேதி விதிக்கப்பட்டிருந்த நிலையில், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கை மேலும்  மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து செவ்வாய்க்கிழமை பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். 

இந்த நிலையில் இந்தியாவிலேயே கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரத்தில் மேலும் புதன்கிழமை 117 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநில தலைநகரான மும்பையில் 66 பேரும், புனேயில் 44 பேருக்கும், தாராவில் இருந்து மேலும் 7 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, மகாராஷ்டிரத்தில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் நோய்த்தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருகிறது என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மும்பை மருத்துவமனை ஒன்றின் ஊழியர்களில் மேலும் 10 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மருத்துவமனையின் ஊழியர்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com