வைரலாகும் கமலின் ‘அறிவும் அன்பும்’.! 

கொல்லும் கரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து
வைரலாகும் கமலின் ‘அறிவும் அன்பும்’.! 

கொல்லும் கரோனா கூட சாதி,மதம் பார்ப்பதில்லை. ஆனால் நாமோ,நம்மை காக்க போராடுபவர்களின் இறுதி காரியங்களில் கூட தன்னலம் பார்த்து, இறுதி மரியாதையை தடுப்பது அரக்க குணம். பாதுகாப்புக்கருவிகள் இல்லாமல்கூட தன்னுயிரைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள்தான் இப்போரில் நம் வணக்கத்துக்குரிய வீரர்கள் என்று தெரிவித்திருந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஒரு புதிய முயற்ச்சியாக பல நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் ஒன்றிணைந்து ‘அறிவும் அன்பும்' எனும் தலைப்பில், தற்போதைய கரோனா ஊரடங்கு நிலைக்குத் தேவையான கருத்துக்களுடன் ஒரு அழகிய பாடல் சமூக ஊடகங்களில்வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்பாடலில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்தர், தேவி ஸ்ரீ பிரசாத், ஷங்கர் மகாதேவன், சித் ஸ்ரீராம், பாம்பே ஜெயஸ்ரீ, ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா ஜெரேமியா, பிக்பாஸ் புகழ் முகேன் ராவ், கமல்ஹாசன் ஆகியோருடன் லிடியன் நாதஸ்வரம், நடிகர் சித்தார்த் உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளனர். மேலும் அவர்களுடன் 40-க்கும் மேற்பட்டவர்கள், இப்பாடலுக்கு பின்னணி குரலும், டெக்னிகல் வேலையையும் செய்துள்ளனர்.

ஒவ்வொருவரும், அவர்கள் தங்கள் இடத்திலிருந்தே ஆடியோவை பதிவு செய்து வலைத்தளம் மூலமாக அனுப்பப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது. 

இந்த விடியோவை மஹேஷ் நாராயணன் தொகுத்துள்ளார். இந்த புரட்சிகரமான விடியோ பாடலை ‘Think Music' வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com