தமிழ் பாடத்தில் 99 மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவிக்கு காங்கிரஸ் பாராட்டு

ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவிக்கு, நிதி உதவி மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 
அரசுப்பள்ளி மாணவி ரசிகாவுக்கு நிதி உதவி மற்றும் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர். 
அரசுப்பள்ளி மாணவி ரசிகாவுக்கு நிதி உதவி மற்றும் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர். 


ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த அரசுப்பள்ளி மாணவிக்கு, நிதி உதவி மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பெரியவீரசங்கிலி பகுதியைச் சார்ந்த சாந்தி என்பவரின் மகள் ஆர்.ரசிகா. அரசுப்பள்ளியில் பயின்ற இவர், பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 100க்கு 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.      

இந்த மாணவியின் வீட்டிற்கு சனிக்கிழமை சென்ற ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன்,   மாணவி ரசிகாவுக்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு, ரூ.5,000 நிதியையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் வாழ்த்துச் செய்தியையும் அளித்தார். 

மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளையின் சார்பில் மேற்படிப்பிற்கு நிதி வழங்கப்படும் என்றும்  மாணவியிடம் தெரிவித்தார். நிகழ்வில் வட்டாரத் தலைவர் ராவுத்குமார், நிர்வாகிகள் சண்முகம், ராஜரத்தினம், மோகன்ராஜ், சாந்தி, செல்வம் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com