திருச்சி: இஸ்லாமியர்களின் இல்லங்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் அனைத்து பள்ளிவாசல் பகுதிகளிலும் அவரவர் இல்லங்களிலும், இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் சமூக இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  திருச்சியில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  திருச்சியில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர்.

திருச்சி: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் அனைத்து பள்ளிவாசல் பகுதிகளிலும் அவரவர் இல்லங்களிலும், இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் சமூக இடைவெளியுடன் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

மேலும், உறவினர்கள், நண்பர்கள், ஏழை, எளியோருக்கு இறைச்சி மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்களை தானமாக (குர்பானி) வழங்கி பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் சிறப்பாகக் கொண்டாடினர். 

இறைவனுக்காக தனது மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய துணிந்த நபியின் (ஸல்) தியாகத்தை போற்றும் வகையில் இஸ்லாமியர்களால் தியாகத் திருநாள் பண்டிகை  துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. மேலும் பக்ரீத் நாளில் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியை வழங்குவதும் இஸ்லாமியர்களின் வழக்கம். 

நிகழாண்டு பக்ரீத் பண்டிகை நாடு முழுவதும் சனிக்கிழமை இஸ்லாமியர்களால் உற்சாகமாகக் கொண்டப்பட்டது. கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, பொது இடங்களில் அதிகம் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் பொது இடங்களில் தொழுகை நடைபெறவில்லை. அவரவர் இல்லங்களிலும், இல்லங்களுக்கு அருகில் உள்ள சிறிய திறந்தவெளி இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 10 முதல் 15 நபர்களாக கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். 

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  திருச்சியில் இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்றனர். பின்னர், ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். வழக்கமாக தொழுகை நடைபெறும் ஈத்கா மைதானங்களில் தொழுகை நடைபெறவில்லை.

திருச்சியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான பாலக்கரை, மரக்கடை, ஆழ்வார்தோப்பு, காயிதேமில்லத் நகர், காஜாதோப்பு, காஜாமலை, மன்னார்புரம், கே.கே.நகர், கன்டோன்மென்ட், தென்னூர், உறையூர், பீரங்கிகுளம், ஹசன்பார்க், காந்திமார்கெட், செளக் முஹம்மதியா பள்ளிவாசல் பகுதி, நதர்ஷா பள்ளிவாசல், ரஹ்மானியாபுரம், சோமரசம்பேட்டை, குத்பிஷா தர்கா, வாளாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில், இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாற்றம் செய்தனர். இதேபோல, மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com