ராமர் கோயில் மாதிரியில் மாறுகிறது அயோத்தி ரயில் நிலையம்

ராமர் கோயில் தோற்றத்தில் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் 80 முதல் 104 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராமர் கோயில் தோற்றத்தில் மாற உள்ள அயோத்தி ரயில்நிலையம்
ராமர் கோயில் தோற்றத்தில் மாற உள்ள அயோத்தி ரயில்நிலையம்


உத்தரப்பிரதேசம்: ராமர் கோயில் தோற்றத்தில் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு சார்பில் 80 முதல் 104 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஆகஸ்ட் 5-ஆம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன.

இதனிடையே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறுவதற்கு முன்பாக ராமர் கோயில் தோற்றத்தில் அயோத்தி ரயில் நிலையம் மறு உருவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 80 கோடி முதல் 106 கோடி ரூபாய் வரை மத்திய அரசு நிதி ஒதுக்கி பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. ராமர் கோயிலை கட்டி முடிப்பதற்குள் ரயில் நிலையம் மறு உருவாக்க பணிகள் நிறைவடைய உள்ளது.

இது தொடர்பாக சுட்டுரையில் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ்கோயல் குறிப்பிட்டுள்ளதாவது,  கோடிக்கணக்கான பக்தர்கள் ராமரை தரிசனம் செய்வதற்காக வருகை புரிய உள்ளனர். இதனால் அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைக்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

அயோத்தி ரயில் நிலையத்தை சீரமைப்பு செய்ய ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது ராமர் கோயில் வடிவில் மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளது. அதிக பயணிகளையும், மேம்பட்ட அடிப்படை வசதிகளையும் கொண்ட வகையில் ரயில்நிலையம் சீரமைக்கப்பட உள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நடைபாதை ஒரு பகுதியாகவும், பயணச்சீட்டு வழங்குமிடம், ஓய்வறைகள், கழிவறைகள் அடங்கிய கட்டடம் மற்றொரு பகுதியாகவும் பிரித்து இரண்டு கட்டங்களாக மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com