ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த 3 பாம்புகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த இரண்டு சாரைப் பாம்புகள் மற்றும் ஒரு நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்புகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்புகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்த இரண்டு சாரைப் பாம்புகள் மற்றும் ஒரு நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி பிடித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது படிக்காசு வைத்தான் பட்டி அந்த பகுதியை சேர்ந்தவர் மாரிச்சாமி இவருக்கு சொந்தமான தகரக் கொட்டகை வீடு உள்ளது.

இந்த வீட்டில் மேலே போடப்பட்டுள்ள பைப்புகளில் இரண்டு சாரைப் பாம்புகள் புகுந்து கொண்டன. வீட்டின் மேற்கூரை தகரக் கொட்டகையில் சாரைப் பாம்புகள் இரண்டு இருப்பதைப் பார்த்த மாரிச்சாமி அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறை அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செவ்வாய்கிழமை  தகர கொட்டகையில் இரும்பு பைப்புகளில் பதுங்கியிருந்த இரண்டு சாரைப் பாம்புகளை போராடி பிடித்தனர்.

அதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்தியலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னராஜ் இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்தது. இந்தப் பாம்பு தோட்டத்தில் இருந்து ஒரு வீட்டுக்குள் நுழைய முயன்றது அந்த பாம்பையும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். மொத்தம் மூன்று பாம்புகளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத கண்மாய் பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி கூறும்போது, 

இரண்டு சாரைப் பாம்பும் சுமார் 8 அடி நீளமும், நல்ல பாம்பு சுமார் 6 அடி நீளம் இருந்தது. அனைத்தை பாம்புகளையும் உயிருடன் கண்மாய் பகுதியில் விட்டு விட்டோம் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com