தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழறிஞர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த பதாகை

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து தமிழறிஞர்கள் அறிந்து கொள்ளும வகையில் பதாகையை திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை


திருவள்ளூர்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து தமிழறிஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பதாகையை திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாவது தளத்தில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து தமிழறிஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் நலத்திட்டங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கவும் கோரிக்கை எழுந்தது.

இதன் அடிப்படையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து விருதுகள் வழங்குதல், சிறந்த நூல் பரிசு போட்டி, நூல் வெளியிட நிதியுதவி, திருக்குறள் முற்றோதல் பரிசு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஆகியவை குறித்த முழு விவரங்களுடன் கூடிய பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகையை தொடங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ.விசயராகவன் பங்கேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் நாள்தோறும் ஒரு திருக்குறள் எழுதவும் வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளுர் ஆட்சியர் அலுவலக வளாக முகப்பில் நாள்தோறும் திருக்குறளோடு, கலைச்சொல்லும் எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் வைக்கவும் என்ற அரசாணையினை செயல்படுத்த வேண்டும். மேலும், இந்த மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு தமிழ் வளர்ச்சி துறையின் பணியாளர்களால் துண்டறிக்கை அளிக்கப்பட்டு, தமிழில் பெயர் பலகை வைக்கவும் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் சந்தானலட்சுமி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com