திருச்சியில் தூக்குக் கயறு மாட்டி வாகன ஓட்டுநர்கள் போராட்டம்
By DIN | Published On : 12th August 2020 12:17 PM | Last Updated : 12th August 2020 12:17 PM | அ+அ அ- |

திருச்சியில் தூக்குக் கயறு மாட்டி வாகன ஓட்டுநர்கள் போராட்டம்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சிறகுகள் அனைத்து வாகன ஓட்டுநர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்குக் கயிறு மாட்டி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல ஓட்டுநர்களின் இறப்பிற்குப் பிறகும் மௌனம் காட்டும் தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இஎம்ஐ கால அவகாசம் நீட்டிக்க வேண்டும், வட்டி விகிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறினர்.
மேலும், ஆர்டிஓ சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும், இ பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஏற்றத்தை வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தூக்குக் கயிறு மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.