ராஜஸ்தானில் பாஜகவின் சதித்திட்டம் தோல்வி: அசோக் கெலாட்

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றி ராஜஸ்தான் மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அதிருப்தியில் இருந்த முன்னாள் துணை முதல்வரும், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்ததால் ராஜாஸ்தான் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குழப்பம் நீடித்து வந்தது. இதனிடையே நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் அவரது ஆதரவாளர்களுடன் கலந்துகொண்டதால் சமரசம் ஏற்பட்டது.

இதனை அடுத்து இன்று (வெள்ளிக் கிழமை) காலை ராஜஸ்தான் சட்டப்பேரவை கூடியது. இதில் அசோக் கெலாட் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முதல்வர் அசோக் கெலாட் வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியால் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி அலை பரவியுள்ளது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக செய்த சதித்திட்டத்தை ராஜஸ்தானிலும் செயல்படுத்த முயன்றது. ஆனால், ராஜஸ்தானில் பாஜகவின் சதித்திட்டம் தோல்வியை தழுவியுள்ளது" என்றார். 

"நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கவிழ்க்கும் சக்திகளுக்கு எச்சரிக்கை செய்தியாக உள்ளது. ராஜஸ்தான் மக்களின் நம்பிக்கையும், எங்களது ஒற்றுமையுமே தற்போது வென்றுள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com