உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு வரவேற்பு: ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஊத்தங்கரையில் உச்ச நீதிமன்றத்தின் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்று  அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஊத்தங்கரையில் உச்ச நீதிமன்றத்தின் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தீர்ப்பை வரவேற்று  அருந்ததியர்  இன பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஊத்தங்கரை பகுதியிலுள்ள அருந்ததியர் இன பொதுமக்கள் சார்பாக உச்ச நீதிமன்றம் மாநில அரசுகள் தாழ்த்தப்பட்டோருக்காக 18 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்து நடைமுறைப்படுத்துவது செல்லும் என தீர்ப்பு வழங்கியதை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் இன மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசியல் கட்சி பொதுமக்களுடன், மதுரைவீரன் அறக்கட்டளை தலைவர் மருத்துவர் கந்தசாமி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜே.எஸ்.ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மிட்டப்பள்ளி சின்னதாய் கமலநாதன், கீழ்குப்பம் ஜெயமணி திருப்பதி, பொறியாளர் அணி காந்தி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் சின்னத்தம்பி, சீனிவாசன், முருகன், குருமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

மேலும், நிகழ்ச்சியில் வெப்பாலம்பட்டி, வெண்ணாம்பட்டி, கொட்டாரபட்டி, பனைமரத்துப்பட்டி, ஊனாம்பாளையம், கவுண்டனூர், கஞ்சனூர், அண்ணா நகர், சந்த கொட்டாவூர், வசந்தபுரம், காந்திநகர், கவர்னர் தோப்பு, குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக காமராஜர் அறக்கட்டளை செயலாளர் சின்ன முத்து நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com