கரோனா வைரஸ்: சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம்
By DIN | Published On : 02nd February 2020 07:08 PM | Last Updated : 02nd February 2020 07:08 PM | அ+அ அ- |

சென்னை: கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:
கரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. உரிய விழிப்புணா்வும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், அந்நோய் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை. இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பும், முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சமூக வலைதளங்களில் வீண் புரளிகளை பரப்பக் கூடாது. பொறுப்புணா்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G