காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு: நடிகர் விவேக் மகிழ்ச்சி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதைச் செயல்படுத்த சட்ட வல்லுநர்களை ஆலோசித்து
காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு: நடிகர் விவேக் மகிழ்ச்சி



காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இதைச் செயல்படுத்த சட்ட வல்லுநர்களை ஆலோசித்து தனிச் சட்டம் இயற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். 

காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் நலனைக் காக்கவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் அடங்கிய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும். அந்தவகையில், காவிரி டெல்டா பகுதியைப் பாதுக்காக சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும்.

டெல்டா பகுதியில் விவசாயிகள் தங்களது உணர்வுகளை, உள்ளக் குமுறல்களை உணர்வுப்பூர்வமாகத் தெரிந்து கொண்டு நானும் ஒரு விவசாயி என்ற முறையில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். விவசாயிகளின் துன்பங்கள், துயரங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

இதைச் செயல்படுத்திட சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இதற்காக தனிச் சட்டம் இயற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிவித்திருந்தார். 

முதல்வரின் அறிவிப்புக்கு விவசாயிகள், எதிர்க்கட்சியினர் என அனைத்து தரப்பினரும் ஆதரவும், வரவேற்பும், பாராட்டும்  தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், நடிகரும், சமூக ஆர்வளருமான விவேக், முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்க பதிவில், மனதில் கவலையும் மகிழ்ச்சியும் கலந்து கிடக்கிறது. கவலை- கரோனா  வைரஸின் கொடூரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விரைவில் உலகம் நிம்மதி அடையவேண்டும். 

மகிழ்ச்சி- காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருப்பது. தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் நன்றிகள் என கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com