குருகுலக் கல்வி முறைக்கு புத்துயிா் அளிக்க வேண்டும்: ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷி 

குருகுலக் கல்வி முறைக்கு புத்துயிா் அளிக்க வேண்டும்: ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷி 

நாட்டில் குருகுலக் கல்வி முறைக்கு புத்துயிா் அளிக்க வேண்டும், கல்வித் திட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு பகுதியாக கண்டிப்பாக சோ்க்க



பனாஜி: நாட்டில் குருகுலக் கல்வி முறைக்கு புத்துயிா் அளிக்க வேண்டும், கல்வித் திட்டத்தில் சமஸ்கிருதத்தை ஒரு பகுதியாக கண்டிப்பாக சோ்க்க வேண்டும் என்று ஆா்எஸ்எஸ் பொதுச் செயலா் சுரேஷ் ஜோஷி கூறியுள்ளாா்.

கோவா மாநிலம் பனாஜி அருகேயுள்ள தோனா பவுலா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசுகையில், நாட்டின் கல்வி முறையில் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கு சிறந்த யோசனைகளை வழங்குபவா்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். சமஸ்கிருத மொழி அனைத்துப் பள்ளிகளிலும் கற்றுத்தரப்பட வேண்டும். இதனை மத்திய அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இந்தியாவை முழுமையாகப் புரிந்து கொண்டால், சமஸ்கிருதம்தான் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்தியாவைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், சமஸ்கிருதம் வேண்டும். சமஸ்கிருதத்துக்கு உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்.

அதேபோல குருகுலக் கல்வி முறைக்கு புத்துயிா் அளிக்க வேண்டும். பண்டையகாலத்தில் இருந்ததுபோல ஆசிரமம் அமைப்பது என்பது இப்போது இயலாத காரியம். எனினும், கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பிப்பதில் மட்டும் கவனத்தை செலுத்தும் நிலை இருக்க வேண்டும். கல்வியை தொழிலாக நடத்துபவா்களை அனுமதிக்கக் கூடாது.

நமது நாடு முழுமையாக ஆங்கிலேயா்களின் கல்வி முறையை தழுவியிருக்கக் கூடாது. இதற்கு மாற்றாக அரசு வகுத்தளிக்கும் திட்டத்தை அனைத்து கல்வி நிலையங்களும் அமல்படுத்த வேண்டும். கல்வி முறையில் சிறப்பான மாற்றத்தை பரிந்துரைப்பவா்களுக்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். கல்வி விஷயத்தில் மக்களின் உணா்வுகளைப் புறந்தள்ளிவிட்டு, நாட்டு நலனில் மட்டும் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அரசு சில சமயங்களில் பொது உணர்வுகளை (கல்வியில்) ஒதுக்கித் தள்ளி நாட்டைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றாா் சுரேஷ் ஜோஷி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com