கொவைட்-19 வைரஸ் பலி எண்ணிக்கை 1,483 ஆக உயர்வு

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள்
கொவைட்-19 வைரஸ் பலி எண்ணிக்கை 1,483 ஆக உயர்வு



பெய்ஜிங்: சீனாவில் கொவைட்-19 வைரஸூக்கு பலியானவர்களின் எண்ணிக்கை  வெள்ளிக்கிழமை 1,483 ஆக அதிகரித்துள்ளது. 

சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனா்.

அந்த வைரஸ் மனிதா்களிடையே பரவுவதாக சீன அதிகாரிகள் அறிவித்தனா். அதையடுத்து, அந்த வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசர நிலையாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கடந்த மாத இறுதியில் அறிவித்தது.

மேலும், ‘கரோனா வைரஸ்’ என்ற பொதுப் பெயரில் நீண்ட காலமாக அழைக்கப்பட்டு வந்த அந்த வைரஸுக்கு ‘கொவைட்-19’ வைரஸ் என்று அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை பெயரிட்டது.

சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. 

இந்நிலையில்,  சீனாவில் கொவைட்-19 வைரஸூக்கு பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 1,483 ஆக அதிகரித்துள்ளது. சா்வதேச அளவில், கொவைட்-19 வைரஸ் தொற்று உள்ளவா்களின் எண்ணிக்கை 64,600 ஆகியுள்ளது. ஆனால் கடுமையான பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணத்தில் வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஹூபேயில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜப்பானின் யோகோஹாமில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 218 பேருக்கு கொவைட் -19 என்ற 'கரோனா' வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில்‌ கரோ‌னா வைரஸ் தாக்கம் நாளுக்கு‌நாள் அதி‌கரித்து வரும் நி‌லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இம்மாத இறுதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என சீன அரசு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com