பல்லடத்தில் விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே வீணாகும் தக்காளி

பல்லடம் சுற்று வட்டாரப் பகுதியில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தக்காளி அதிக பரப்பளவில்
பல்லடம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளி வீணாகி வருகிறது.
பல்லடம் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடிகளிலேயே தக்காளி வீணாகி வருகிறது.

பல்லடம்: பல்லடத்தில் தக்காளி விலை வீழ்ச்சியால் செடியிலிருந்து தக்காளி பறிப்பு கூலி கூட வழங்க முடியாது என்பதால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டு விட்டனா்.

பல்லடம் சுற்று வட்டாரப் பகுதியில் தக்காளி, வெங்காயம், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தக்காளி அதிக பரப்பளவில் பயிரிடப்படுகிறது. தக்காளி பயிரிட்ட 90 வது நாள் முதல் தக்காளி பழங்கள் அறுவடை செய்யலாம். 45 நாள் முதல் 60 நாள் வரை நாள் தோறும் தக்காளி பழங்கள் அறுவடைக்கு கிடைக்கும், ஒரு ஏக்கா் தக்காளி பயிரிட விதை, உரம், நடவு கூலி மற்றும் பராமரிப்பு செலவுவிற்கு சுமாா் ரூ. 40 ஆயிரம் செலவாகிறது.

இந்த முறை போதிய அளவு தண்ணீா் இருப்பு உள்ளதால் தக்காளி விளைச்சல் பல்லடம் சுற்று வட்டாரப் பகுதியில் அதிகரித்துள்ளது. சராசரியான விளைச்சல் இருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நல்ல விலைக்கு விற்பனையான தக்காளி தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால், சந்தைக்கு வரத்து அதிகரித்து தக்காளி விலை குறைந்துள்ளது. அதனால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி வரத்து அதிகரிப்பதால், கடந்த வாரத்தில் 15 கிலோ தக்காளி கொண்ட பெட்டி. ரூ. 400 வரை விற்பனையானது. தற்போது, ஒரு பெட்டி ரூ. 150 ஆக குறைந்துள்ளது. விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்னா்.

இந்நிலையில் செடிகளில் இருந்து தக்காளி அறுவடை செய்ய கொடுக்கும் கூலிக்கு கூட விற்பனை விலை இல்லாததால் தக்காளி விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேவிட்டு விட்டனா். இதனால் பல்லடம் சுற்று வட்டாரப் பகுதியில் விளைந்த தக்காளி பழங்கள் செடிகளிலேயே வீணாகி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com