குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் பொது மக்கள் மனு

குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, ஈ.பி.பி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர்
குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு: ஆட்சியரிடம் பொது மக்கள் மனு


ஈரோடு: குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு, ஈ.பி.பி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து  மனு கொடுத்தனர். 

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஈரோடு  மாநகராட்சி பெரிய சேமூர் 2வது மண்டலத்திற்கு உட்பட்ட ஈ.பி.பி நகரில் நாங்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். குடியிருப்புகள் நிறைந்துள்ள எங்கள் பகுதியில் செல்போன்  கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது, அவ்வாறு அந்த கோபுரம் அமைந்தால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கோபுரத்தின் கதிர்வீச்சால் பாதிப்படையும் சூழல் ஏற்படும்,  அருகாமையில் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், குழந்தைகள் விளையாடும் பூங்கா என பொதுமக்களின் பயன்பாடு அதிகம் உள்ள இடமாக இருப்பதால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், எனவே பொதுமக்களின் உடல்நலம், மனநலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செல்போன்  கோபுரத்தை அமைக்கக் கூடாது. இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com