ராமர் கோயில் கட்டுமான குழுத் தலைவர் மிஸ்ரா - முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் சந்திப்பு

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வெள்ளிக்கிழமை
ராமர் கோயில் கட்டுமான குழுத் தலைவர் மிஸ்ரா - முதல்வர் யோகி ஆதித்யநாத் திடீர் சந்திப்பு

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வெள்ளிக்கிழமை சந்தித்தார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்-நிருபேந்திர மிஸ்ரா சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனான மிஸ்ராவின் சந்திப்பு ஒரு மூத்த அரசு அதிகாரியின் மரியாதைக்குரிய சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடித்தது. 

பிப்ரவரி 19 இல் புதுதில்லியில் நடந்த முதல் கூட்டத்தில் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ் தலைவராகவும், அறக்கட்டளையின் சம்பத் ராய் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூத்த வழக்கறிஞர் கே பராசரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ராவை ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்வு செய்திருந்தார்.

2020 மார்ச் 25 ஆம் தேதி ராம நவமி அன்று ராமர் கோயில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 2 வரை சைத்ரா நவராத்திரியின் போது கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் - நிருபேந்திர மிஸ்ரா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com