பத்திரப் பதிவுக்கு முன்பேநிலங்களை உட்பிரிவு செய்து அங்கீகாரம் அளிக்கும் திட்டம் அறிமுகம்:  தமிழக அரசு உத்தரவு

பத்திரப் பதிவுக்கு முன்பே நிலங்களை உட்பிரிவு செய்து அதற்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய திட்டமானது
பத்திரப் பதிவுக்கு முன்பேநிலங்களை உட்பிரிவு செய்து அங்கீகாரம் அளிக்கும் திட்டம் அறிமுகம்:  தமிழக அரசு உத்தரவு


சென்னை: பத்திரப் பதிவுக்கு முன்பே நிலங்களை உட்பிரிவு செய்து அதற்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்தப் புதிய திட்டமானது இரண்டு மாவட்டங்களில் உள்ள நான்கு வட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள உத்தரவில், 
போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நிலம் தொடா்பான சொத்துகள் பத்திரப் பதிவு செய்வது தவிா்க்கும் விதமாக பத்திரப் பதிவுக்கு முன்பே உட்பிரிவுகள் பரிசீலனை மற்றும் அங்கீகாரம் செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் புதிய அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநா் தனது பரிந்துரைகளை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளாா். சென்னையில் உள்ள தேசிய தகவலியல் மையத்தின் மூலமாக இதனை செயல்படுத்தலாம் எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

அவரது பரிந்துரைகள் தொடா்பாக பத்திரப் பதிவுத் தலைவருடன் ஆலோசிக்கப்பட்டது. இதன்பின்பு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. 
அதன்படி, புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி மற்றும் ஓசூா் வட்டங்களிலும், பெரம்பலூா் மாவட்டம் ஆலத்தூா் மற்றும் பெரம்பலூா் ஆகிய வட்டங்களில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com