குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது 

குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் ஊரக, உள்ளாட்சி
குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது 


குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளான தேர்தல் கடந்த மாதம் 27. ம மற்றும் 30. ஆகிய இரு நாட்களாக நடைபெற்ற து முதல் கட்டமாக ராஜாக்காமங்கலம், குருந்தன் கோடு த க்கலை, திருவ ட்டாரு, மேல்புறம் ஆகிய 5 ஒன்றியங்களில் தேர்தல் நடை பெற்றது . 

தமிழகத்திலேயே முதல் முறையாக மேல்புறம் ஒன்றியத்தில் மின்னணு இயந்திரம் மூலம் வாக்குபதிவு நடத்தப்பட்டது. முதல் கட்ட தேர்தலில் 65.93 சதவீதம் பேர் வாக்களித்தனர் .  2 ஆம் கட்டமாக  அகஸ்தீஸ்வரம், தோவாலை, கிள்ளியூர், முன்சிறை ஆகிய 4. ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் 67.94. சதவீத வாக்குகள் பதிவானது . வாக்குபதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குபதிவு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.    

இந்நிலையில்,  குமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 9  இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com