கும்மிடிப்பூண்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை துவங்கிய நிலையில் கும்மிடிப்பூண்டியில்
கும்மிடிப்பூண்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தாமதம்

கும்மிடிப்பூண்டி: நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை துவங்கிய நிலையில் கும்மிடிப்பூண்டியில் வாக்கு எண்ணிக்கை 1 மணி நேரம் தாமதமானது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சி மன்ற தலைவர், 486 ஊராட்சி வார்டு உறுப்பினர், 26 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 3 மாவட்ட கவுன்சிலர் உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடைபெற்றது.

தொடர்ந்து பதிவான வாக்குககள் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சீல் வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்ட அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு வைக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை ஒட்டி வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், போலீஸார், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் குவிந்தனர்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தினுள் மெட்டல் டிடெக்டர் கருவி சோதனைக்கு பின் வேட்பாபாளர்களும் அவர்களது முகவர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பதிவான வாக்குகள் சீல் வைக்கப்பட்ட அறையில்  பூட்டப்பட்ட இரும்பு கதவின் முன் பாதுகாப்பிற்காக மரச்சட்டம் அடித்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் அந்த மரச்சட்டத்தை அகற்ற அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்ட நிலையில் 30நிமிட போராட்டத்திற்கு பிறகு மரச்சட்டம் அகற்றப்பட்டு சீல் வைக்கப்பட்ட கதவு திறக்கப்பட்டது. இதனால் 8மணிக்கு துவங்க வேண்டிய வாக்கு எண்ணிக்கை பணி 1 மணி நேர தாமதத்தில் 9மணிக்கே துவங்கியது.

தொடர்ந்து வாக்கு பெட்டிகள் பகுதி 10அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அந்தந்த பதவிக்குரிய வண்ண வாக்கு சீட்டுகள் தனித்தனியா க பிரிக்கப்பட்டது. இந்த பணியில் 599 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கை பணியை தேர்தல் அலுவலர்களான சாமிநாதன்,ரவி, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் செந்தாமரைசெல்வி, டிஎஸ்பி ரமேஷ் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com