திருப்பூர் மாவட்டத்தில் 13 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக வாக்குகள்
திருப்பூர் மாவட்டத்தில் 13 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

திருப்பூர் மாவட்டத்தில் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் கட்டமாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி, 170 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகள், 265 கிராம ஊராட்சி தலைவர்கள் பதவிகள், 2295 கிராம  ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி உள்பட 13 மையங்களில் நடைபெற்று வருகிறது. காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கையை திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் வைத்தார்.5 ஆயிரம் ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, அனைவரும் பரிசோதனைக்கு பின்னர் உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர்.  

வாக்கு எண்ணிக்கை முழுமையாக சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது. கட்டுப்பாட்டு மையம் மூலம் உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com