சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி: அதிமுக கூட்டணி 8; திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி

சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும்,திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவி: அதிமுக கூட்டணி 8; திமுக கூட்டணி 8 இடங்களில் வெற்றி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவியில் அதிமுக கூட்டணி 8 இடங்களிலும்,திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் 16 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.இதில் அதிமுக,திமுக,காங்கிரஸ் உள்பட சுயேட்சை வேட்பாளர் என 75 பேர் போட்டியிட்டனர்.

இதையடுத்து,பதிவான வாக்குகள் எண்ணும் பணி வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கத்திலிருந்து அதிமுக கூட்டணியும்,திமுக கூட்டணியும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தன.வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி,1 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் ம.பாஸ்கரன் வெற்றி பெற்றுள்ளார். இதே போன்று, 2 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் அ.மதிவாணன், 3-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் ரெ.ரவி, 4-ஆவது வார்டில் திமுக வேட்பாளர் லெ.மஞ்சரி, 5 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பா.ராதா, 6-ஆவது வார்டில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரெ.சுந்தரராஜன்,7 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் பா.செந்தில்குமார், 8 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அ.சரஸ்வதி, 9 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் செ.ஸ்டெல்லா, 10 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் கோமதி, 12 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் பாக்கியலெட்சுமி,13 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் மு.கருப்பையா, 14 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் அ.சொ.மாரிமுத்து, 15 ஆவது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஆரோக்கிய சாந்தாராணி, 16 ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் செ.மகேஸ்வரி வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து,மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக கூட்டணி 8 இடங்களிலும், திமுக கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெற்று சமநிலையை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com