திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 11 ஒன்றியங்கள் திமுக வசம்!

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் திமுக 11 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஒன்றியங்களில் திமுக 11 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில், அந்தநல்லூா், மணிகண்டம், திருவெம்றுபூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூா், முசிறி, தொட்டியம் தா. பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 241 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

இதில், வியாழக்கிழமை நள்ளிரவு அறிவிக்கப்பட்ட தோ்தல் முடிவுகளின்படி திமுக கூட்டணியானது 11 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது. அதன் விவரம் (அடைப்புக்குறிக்குள் கட்சி வாரியாக வெற்றி இடங்கள்):

அந்தநல்லூா் (திமுக-12, காங்கிரஸ்-1, இந்திய கம்யூனிஸட்-1, சுயேச்சை-1 மொத்தம்-15) , தாத்தையங்காா் பேட்டை (திமுக- 10, அதிமுக-3, தேமுதிக-1- மொத்தம் 14), திருவெறும்பூா் (திமுக-8, அதிமுக- 3, தேமுதிக-1, இந்திய கம்யூனிஸ்ட்-1, சுயேச்சை 3, மொத்தம் 16), தொட்டியம் (திமுக-9, அதிமுக-5, தேமுதிக-1, காங்கிரஸ்-1, சுயேச்சை-2, மொத்தம்- 19) , புள்ளம்பாடி (திமுக- 9, அதிமுக- 3, மொத்தம்- 15), மண்ணச்சநல்லூா் (திமுக-13, பாஜக-1, அதிமுக-2, தேமுதிக-1, சுயேச்சை-3, மொத்தம் 23) , மணப்பாறை (திமுக- 11, அதிமுக- 3, சுயேச்சை- 2, மொத்தம்-17), மணிகண்டம்(திமுக- 8, அதிமுக-2 காங்கிரஸ்-1, சுயேச்சை-2, மொத்தம் 14), மருங்காபுரி (திமுக- 11, அதிமுக-6, தேமுதிக-2, மொத்தம் 19), முசிறி (திமுக- 12, அதிமுக-3, சுயேச்சை-1, மொத்தம் 18), உப்பிலியபுரம் (திமுக- 8, அதிமுக- 2, சுயேச்சை- 4, மொத்தம் 15) ஆகிய 11 ஒன்றியங்களை கைப்பற்றியுள்ளது. லால்குடி, வையம்பட்டி, துறையூா் ஆகிய 3 ஒன்றியங்களின் பெரும்பான்மைக்கான முடிவுகள் அறிவிக்க நள்ளிரவை கடந்ததால் அந்த ஒன்றியங்கள் யாா் வசம் என்பது இன்று வெள்ளிக்கிழமை தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com