மணப்பாறை அருகே உள்ளாட்சி தேர்தல் வெற்றி அறிவிப்பில் குளறுபடி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாநில தேர்தல் ஆணைய பதிவேட்டில் வெற்றி பெற்றதாக ஒருவர் பெயரும், வெற்றி சான்றிதழ்
வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழ்.
வழங்கப்பட்ட வெற்றி சான்றிதழ்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாநில தேர்தல் ஆணைய பதிவேட்டில் வெற்றி பெற்றதாக ஒருவர் பெயரும், வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது மற்றொருவருக்கும் என உள்ளாட்சி தேர்தல் வெற்றி அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டிருப்பதாக வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார்.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கருப்பசாமி என்பவர் சாவி சின்னத்திலும், அர்ச்சுணன் என்பவர் சீப்பு சின்னத்திலும் போட்டியிட்டனர். மொத்தம் 494 வாக்குகள் கொண்ட வார்டில் 383 வாக்குகள் பதிவான நிலையில் ஓட்டு எண்ணிகையின்போது 379 வாக்குகள் மட்டுமே பெட்டியில் இருந்துள்ளது. 4 வாக்குகளை வாக்காளர்கள் கையிலேயே எடுத்து சென்றிருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் 19 வாக்குகள் செல்லாததாக நிர்ணயிக்கப்பட்டு மீதமுள்ள 360 வாக்குகளில் கருப்பசாமி 229 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதாம். அதற்கான சான்றிதழை சனிக்கிழமை பெற்று செல்ல வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற கருப்பசாமிக்கு, அர்ச்சுணனிடம் வெற்றி சான்றிதழ் அளிக்கப்பட்ட செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக கணிப்பொறி மையத்திற்கு சென்று மாநில தேர்தல் ஆணையத்தின் பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் கருப்பசாமியே வெற்றி பெற்றதாகவும் பதிவு இருந்துள்ளது. இதுகுறித்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கருப்பசாமியிடம் முறையாக பதிலை அளிக்கவில்லையாம்.

மாநில தேர்தல் ஆணைய பதிவேட்டில் உள்ள வெற்றியாளர் பெயர்.

இந்நிலையில், வெற்றி சான்றிதழ் பெற்றுள்ள அர்ச்சுணன், தனக்கு தான் 231 வாக்குகள் கிடைத்தது என்றும் நானே அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றேன் என்று கூறிகிறார். இதுகுறித்து வையம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், வெற்றி பெற்றவர் பெயர் கணிப்பொறியில் பதிவேற்றம் செய்யும்போது தவறு ஏற்பட்டுள்ளதாகவும், அவை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் பதிவேட்டில் திருத்தம் செய்யப்பட்டு அர்ச்சுணன் வெற்றி பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மாநில தேர்தல் ஆணைய பதிவேட்டில் வெற்றி பெற்றதாக ஒருவர் பெயரும், வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது மற்றொருவருக்கும் என உள்ளாட்சி தேர்தல் வெற்றி அறிவிப்பில் குளறுபடி ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com