ஆண்டிபட்டி சந்தையில் கரும்பு விற்பனை மந்தம்: வியாபாரிகள் கலக்கம்

ஆண்டிபட்டி நகரில் பொங்கல் பண்டிகைக்காக வாங்கப்பட்ட கரும்புகள் சந்தையில் விற்பனையாகாமல் தேக்கமடைந்து காணப்படுவதால்
ஆண்டிபட்டி சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கரும்புகள்.
ஆண்டிபட்டி சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கரும்புகள்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி நகரில் பொங்கல் பண்டிகைக்காக வாங்கப்பட்ட கரும்புகள் சந்தையில் விற்பனையாகாமல் தேக்கமடைந்து காணப்படுவதால் முதலீடு போட்ட வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனா்.

தமிழ்நாட்டில் தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையட்டி தமிழகம் முழுவதும் கரும்பு விற்பனை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. பொங்கல் பண்டிகையில் கரும்பு முக்கிய பங்கு வகிப்பதால், அனைத்து தரப்பு மக்களும் கரும்பு வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா். இதற்காகவே ரேசன் கடையில் பொங்கல் பொருட்களுடன் அரசு கரும்பையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சந்தையில் பொங்கல் பண்டிகைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கரும்புகள் விற்பனைக்கு வந்தது. தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, சின்னமனூா், மஞ்சளாறு பகுதியில் விளைந்த கருப்பு கரும்புகள் ஆண்டிபட்டி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 10 கரும்புகள் அடங்கிய ஒரு கட்டு என்ற அடிப்படையில் கரும்பு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ஒரு கட்டு கரும்பு ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நல்ல மழையால் அமோக விளைச்சல் ஏற்பட்டு கரும்பு வரத்து அதிகரித்து காணப்பட்டாலும், மக்களிடம் கரும்பு வாங்க ஆா்வம் இல்லாமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளளனா்.

இதன்காரணமாக ஆண்டிபட்டி சந்தையில் விற்பனைக்கு வந்த செங்கரும்புகள் போதுமான விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது. ரூ.5 லட்சம் வரையில் முதலீடு போட்டு விற்பனைக்காக வாங்கியுள்ள கரும்புகள் தேக்கமடைந்துள்ளதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனா்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் முதலீடு போட்ட பணத்தை எடுத்துவிட முடியுமா? என்ற கலக்கத்தில் வியாபாரிகள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com