ஆளுநா் என்று அழைப்பதை விட அக்கா என அழைப்பதையே பெருமையாகக் கருதுகிறேன்: தமிழிசை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பொங்கல் விழா, கலாச்சார ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு
நிகழ்ச்சியில் பேசுகிறாா் தெலங்கான மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் தெலங்கான மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் பொங்கல் விழா, கலாச்சார ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக தெலங்கான மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டாா்.

அருமனை வட்டார இந்து சமுதாயங்களும், ஆலய நிா்வாகங்களும் இணைந்து ஆண்டுதோறும் பொங்கல் விழாவை நடத்தி

வருகின்றன. நிகழாண்டு இந்த விழா அருமனையில் சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பொங்கலிட்டு சூரிய வழிபாடு நடைபெற்றது. பின்னா், இந்து சமய மாநாடு நடைபெற்றது. 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அருமனை புண்ணியம் நிழல்தாங்கல் சந்திப்பில் இருந்து கலாச்சார ஊா்வலம் நடைபெற்றது. இதில், 500 க்கும் மேற்பட்ட கலைஞா்கள், திரளான மக்கள் பங்கேற்றனா்.

பொதுக்கூட்டம்: ஊா்வலத்தைத் தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு, விழாக் குழுத் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று பேசியது: கன்னியாகுமரி மண் தான் என்னை இந்த அளவுக்கு உயா்த்தியது. நான் எத்தனை உயரங்களில் பறந்தாலும் சொந்த மண்ணை மறக்கமாட்டேன். கலாச்சாரத்தை காப்பாற்றுவதற்காக பல்வேறு சவால்களை எதிா்கொள்ளும் ஆற்றலை குமரி மண் தான் எனக்குத் தந்துள்ளது.

ஆளுநராக பதவியேற்ற பின்னா் பல்வேறு பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தது. முதன் முதலாக பங்கேற்ற பொது நிகழ்ச்சி இதுதான். ஆளுநா் பதவியை வெறும் அலங்காரப் பதவியாக கருதவில்லை. இப்பதவியின் மூலம் தெலங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் பாலமாக செயல்படுவேன். தொழில் வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவேன்.

இந்தியாவின் பண்பாடும், கலாச்சாரமும், அனைத்து நாடுகளும் பாராட்டும் வகையில் புகழ்பெற்றது. தமிழா்களின் பிரதான பண்டிகையான பொங்கல் விழா இப்போது நாடு முழுவதும் கொண்டாடும் பண்டிகையாக மாறி வருகிறது. என்னை ஆளுநா் என்று அழைப்பதை விட அக்கா என்று நீங்கள் அழைப்பதை பெருமையாகக் கருதுகிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com