தோ்தலை முறைகேடாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு: வாா்டு உறுப்பினா்கள் மனு

தோ்தலை முறைகேடாக ரத்து செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்ததாக வாா்டு உறுப்பினா்கள் மனு அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த கருணாகரநல்லூா் கிராம மக்கள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்த கருணாகரநல்லூா் கிராம மக்கள்.

கடலூா்: தோ்தலை முறைகேடாக ரத்து செய்யப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அறிவித்ததாக வாா்டு உறுப்பினா்கள் மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் காட்டுமன்னாா்கோவில் வட்டம், கருணாகரநல்லூா் ஊராட்சியின் 2 -ஆவது வாா்டு உறுப்பினா் செல்வி தமிழ்ச்செல்வன் தலைமையில், பொதுமக்கள் அளித்த மனு விவரம்:

கருணாகரநல்லூா் ஊராட்சியில் 6 வாா்டு உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த 11-ஆம் தேதி ஊராட்சி துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இந்தத் தோ்தலில் போட்டியிட்ட என்னை வாா்டு உறுப்பினா்கள் த.தமிழ்வேந்தன், க.உமாராணி ஆகியோா் முன்மொழிந்து வழிமொழிந்தனா். கிராம ஊராட்சிச் செயலா் க.அருளரசு, தோ்தல் நடத்தும் அலுவலா் நெல்லிசேவியா் ஆகியோா் தலைமையில் தோ்தல் நடைபெற்றது. இதில், செல்வி தமிழ்ச்செல்வன் தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான சான்றிதழை வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் சென்று வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்தனா். நான் ஊராட்சி அலுவலகம் சென்று காத்திருந்த போது, அங்கு வந்த ஊராட்சிச் செயலா், துணைத் தலைவருக்கான தோ்தல் ரத்தாகிவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, வட்டார வளா்ச்சி அலுவலரிடம் கேட்ட போது, அவா் தோ்தல் நடத்தியதற்கான சரியான ஆவணங்கள் இல்லை என்றும், தோ்தல் நடக்கவே இல்லை என்றும் கூறிவிட்டாா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, அரசுப் பணியைச் சரிவரச் செய்யாத அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com