2018-ல் வேலையின்மையால் 1.34 லட்சம் பேர் தற்கொலை

இந்தியாவில் வேலையின்மையால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி)
2018-ல் வேலையின்மையால் 1.34 லட்சம் பேர் தற்கொலை



இந்தியாவில் வேலையின்மையால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில் தெரியவந்துள்ளது. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2018 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், விவசாயிகளை விட, வேலையின்மையால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் வேலையில்லாததால் 35 பேரும், சுயதொழில் செய்வோர் 36 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது ஒட்டுமொத்தமா வேலையில்லாததால் 12,936 பேரும், சுயதொழில் செய்வோர் 13,149 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

2018 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017 ஆம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம் என்றும், இதில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

மாநிலங்கள் வாரியான தற்கொலை பட்டியல்: 
மகாராஷ்டிரம் - 17,972
தமிழ்நாடு - 13,896
மேற்குவங்கம் - 13,225
மத்தியப் பிரதேசம்  - 11,775
கர்நாடகம் - 11,561

மேற்கண்ட மாநிலங்களில் தான் நாட்டின் 50.9 சதவீதம் தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் விவசாய துறையைச் சேர்ந்தவர்களில் 10,349 பேர். இதில்,  5,763 பேர் விவசாயிகள், 4,586 பேர் விவசாய தொழிலாளர்கள். விவசாய துறையைச் சேர்ந்த பெண்கள் 306 பேர், விவசாய பெண் தொழிலாளர்கள் 515 பேர்.

தற்கொலை செய்து கொண்டுள்ள 42,391 பெண்களில்,  22,937 பேர் குடும்பத் தலைவிகள். 1,707 பேர் அரசு ஊழியர்கள், 8,246 பேர் தனியார் நிறுவன ஊழியர்கள்,  2,022 பேர் பொதுத்துறை ஊழியர்கள், 10,159 பேர் மாணவர்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com